Posts

முத்தம் வேண்டுமடி சகியே

இந்த முத்தத்திற்கு தான் எத்தனை யுத்தம் செய்கிறாய்.. மொத்தத்திற்கு.. மூச்சடக்கி வாயடக்கி .. காத்திருக்கும்  பக்தன் போல்.. நீ.. .. ப்ச்!ப்ச்! ஆனால் இந்த முத்ததத்திற்கு நீ படும்பாடு.. பேரின்ப இம்சை தான்.. .. படு படு.. என்பதுமே உன் சிந்தனை ஓடிப்போகும்.. எங்கேன்று நான் சொல்லும் முன்னே.. .. இங்கே படு.. என்பது நீ படும்பாடாக.. .. அடேய்! ரசிக்க வைக்கிறது உன் இம்சைகள் இரட்சிக்கத் தோன்றுகிறது என் மீதான நின்காதலை.. .. சரி..! சரி..! முத்தம் கிடைக்குமா.. கிடைக்காதா.. .. காத்திரு.. கண்கள் வேர்த்திட.. .. வேதாளம் முருங்கைமரம் ஏறியது.. சரியான பதிலில்.... ப்போடா! ப்போ! ஆகுற வேலையப்பார்..  

கண்ணன் கள்வன் ஆனான் -8

கண்ணன் கள்வன் ஆனான் -8 பரமாத்மாவும் ஜீவ ஆத்மாவுக்கும் வேறு வேறாக பார்ப்பது எப்படி சாத்தியம்? .. என்னுள் நீ...எனக்காக நீயல்லாது.. இருத்தல் நியாயமில்லை.. நீயாகப்போன நான்.. எப்படி என்னை நானே  மணந்து கொள்வது.. .. என்னியக்கமே நீதானே ராதே லட்சுமி.. எனை ஆட்கொண்ட கணத்தின் இத்யாதி இத்யாதி கதைகள் ஆயிரம் பேசப்படலாம்..படிக்கவும்.. .. நீ என்னை உற்றுக்நோக்கினால்.. உனக்குமே புரியுமடி ராதே.. உன் பெண்ணுருவம்.. நான்.. என் ஆணுருவம் நீ.. .. சகலமும் சங்கல்ப அர்ப்பணம்.. உடல் தேடல் தாண்டியொரு உள்ளார்ந்த பயணத்தில் காதல் வேறு காமம் வேறென்ன எப்படிக் கொள்ள முடியும்..உள்ளத்தை நிறைத்தப்பின் உடல் தேடலின் மீதொரு நாட்டம் வாராதென.. உயிரில் உடல் தனிதனியாகுவோ.. தனித்து பிரிந்தால்.. உடல் வெற்றாகுமே.. காற்றுபுகு சமநிலை கொள்ளல் தானடி வாழ்வார்த்தம்! .. உலகமும் அறிந்தக் கொள்ளத்தான் நீ நான் நாம் எனும் ராதா கிருஷ்ணலீலையெல்லாம்.. .. கண்ணன் ஆனால் என்ன  மன்னன் ஆனால் என்ன உனைச்சுற்றும் மன்மதனாக என்னை உன்னால்  சூடிக்கொண்டு வாழ்வதும் பெருந்தவம் தானடி.. லோபியாக உலக இச்சைகளுக்கான அனைத்தும் அப்பாற்பட்ட கூடலில்.. இறை நிலை ...

ரியாவின் காதல் தேசம்

 இந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதென கேட்டால் என்மீதான  உன் பேரன்பை விடச் சிறியது என்பேன் இன்பா!!

இன்பாவின் ரியா

 தூர்ந்து போன இரவுகளின் நீர்த்து போன நின் ஞாபக நினைவலைகள்..அழையாமலே .. ப்ச்!  வேர்த்து போய்.. கடந்தாலும்.. .. உனை சேர்த்தணைத்தே தூங்கிறேன்.. என்னில் நீ கலந்த பின்.. இன்பா.. நீ என்ற நான்  ரியா!! 

மூன்றாம் பால்

இச்சைகள் சற்றே கூட..ஹார்மோன்ஸ் கோளாறு தான்..நடையும் உடையும்நளினமும்....தேடலும் நாடலும்..அதற்கான ஓடலும்..திரைமறைவு ரகசியமாகவைப்பற்கில்லை....ஒதுக்கப்பட்டாலும்ஒதுங்கி நின்றாலும்..ஒடுக்கி நிறுத்தினாலும்..ஒன்றும் வேகாது....வெடித்தெழும் பஞ்சின் சிதறல்களாய்உணர்வுககள் கட்டுக்கடங்காது..இயலா ஏக்கத்தின்உபாதைகள்.. எதைக்கொண்டும்செதுக்க முடியாது..மூன்றாம் பாலென உணர்ந்தபோது செய்ய முடியாததை..ஊருக்கு வெளிச்சம் போட்டுகாட்டிய பின்...செய்ய வேண்டிய மாற்றங்கள்கனம் பொருந்தியதே..கணம் கணம் வலிபொறுத்து.. பொருத்திக் கொள்ளபொருந்திவர போராட்டாமாக....எதற்கும் பொறுப்பு நாங்கள்இல்லாத பொழுது..நாங்களும் திருநங்கையாதிருநம்பியாக வாழ..நம்பித்தான்.. வாழ்வாதாரம்மேம்படுத்த.. அரசின் பார்வைஅரசியல் பார்வையாகஇல்லாமல் வேண்டும்....அதிர நடக்கும் நடையின் லாவகத்தைஉணர்ந்து.. அசராமல்மக்களில் ஒருவராகபச்சாதாபமும் ஏளனமும்இல்லாதது வேண்டும்....அப்பொழுதே மூன்றாம் பால் விபச்சாரமும்கையடித்து காசு பிடுங்கும்அதிகார பிச்சைக்காரத்தனம்....அருவறுப்பாய் அடியோடு கிள்ளிஎறிய வாய்ப்பாக.. 

தொலைந்துப் போகிறேன் நான்

Image