முத்தம் வேண்டுமடி சகியே
இந்த முத்தத்திற்கு தான்
எத்தனை யுத்தம் செய்கிறாய்..
மொத்தத்திற்கு.. மூச்சடக்கி
வாயடக்கி .. காத்திருக்கும்
பக்தன் போல்.. நீ..
..
ப்ச்!ப்ச்! ஆனால் இந்த
முத்ததத்திற்கு நீ படும்பாடு..
பேரின்ப இம்சை தான்..
..
படு படு.. என்பதுமே
உன் சிந்தனை ஓடிப்போகும்..
எங்கேன்று நான் சொல்லும் முன்னே..
..
இங்கே படு.. என்பது நீ படும்பாடாக..
..
அடேய்!
ரசிக்க வைக்கிறது உன் இம்சைகள்
இரட்சிக்கத் தோன்றுகிறது
என் மீதான நின்காதலை..
..
சரி..! சரி..! முத்தம் கிடைக்குமா..
கிடைக்காதா..
..
காத்திரு.. கண்கள் வேர்த்திட..
..
வேதாளம் முருங்கைமரம்
ஏறியது.. சரியான பதிலில்....
ப்போடா! ப்போ!
ஆகுற வேலையப்பார்..
Comments
Post a Comment