கண்ணன் கள்வன் ஆனான் -8
கண்ணன் கள்வன் ஆனான் -8
பரமாத்மாவும் ஜீவ ஆத்மாவுக்கும்
வேறு வேறாக பார்ப்பது
எப்படி சாத்தியம்?
..
என்னுள் நீ...எனக்காக நீயல்லாது..
இருத்தல் நியாயமில்லை..
நீயாகப்போன நான்..
எப்படி என்னை நானே
மணந்து கொள்வது..
..
என்னியக்கமே நீதானே
ராதே லட்சுமி..
எனை ஆட்கொண்ட கணத்தின்
இத்யாதி இத்யாதி கதைகள்
ஆயிரம் பேசப்படலாம்..படிக்கவும்..
..
நீ என்னை உற்றுக்நோக்கினால்..
உனக்குமே புரியுமடி ராதே..
உன் பெண்ணுருவம்.. நான்..
என் ஆணுருவம் நீ..
..
சகலமும் சங்கல்ப அர்ப்பணம்..
உடல் தேடல் தாண்டியொரு
உள்ளார்ந்த பயணத்தில்
காதல் வேறு காமம் வேறென்ன
எப்படிக் கொள்ள முடியும்..உள்ளத்தை
நிறைத்தப்பின் உடல்
தேடலின் மீதொரு நாட்டம்
வாராதென.. உயிரில் உடல்
தனிதனியாகுவோ..
தனித்து பிரிந்தால்.. உடல்
வெற்றாகுமே..
காற்றுபுகு சமநிலை கொள்ளல்
தானடி வாழ்வார்த்தம்!
..
உலகமும் அறிந்தக் கொள்ளத்தான்
நீ நான் நாம் எனும்
ராதா கிருஷ்ணலீலையெல்லாம்..
..
கண்ணன் ஆனால் என்ன
மன்னன் ஆனால் என்ன
உனைச்சுற்றும் மன்மதனாக
என்னை உன்னால்
சூடிக்கொண்டு
வாழ்வதும் பெருந்தவம் தானடி..
லோபியாக உலக இச்சைகளுக்கான
அனைத்தும் அப்பாற்பட்ட கூடலில்..
இறை நிலை எட்டும் சூட்சுமம்
தானே ராதா..நானே ராதா..
..
ஏய்! ராதா இன்னும் கேள்!
நான் உன்னில்
என்னுயிரைக் கள்ளத்தனமாக..
பத்திரப்படுத்திய பெரும் கள்வன் தானடி....
என் இயங்குலகம் ..சுவாசக்களம்
என் ஆயுள் ரேகை எல்லாமே உன்னிலென...
இந்த கலாபக்காதலன்..இந்த கண்ணன்
பெருமை மிகு .. கள்வனானாக!!
Comments
Post a Comment