Posts

Showing posts from August, 2023

இன்பாவின் இனியாள்

Image

நினைப்பதெல்லாம் நடந்திட ஆசை தான்

 இந்த இருளை பிடித்து நிறுத்தி வைத்து ஒருநாளேனும் கேள்வி கேட்க ஆசை.. இரவில் மட்டும் சிலபல உயிர்களை உணர்வுகளை ஊசலாடச் செய்வதேனோ என்றே.. .. அந்த கடிகார முள்ளோடும் கதைத்திட ஆசைதான்.. காலத்தோடு பேரம் பேசி நிற்காமல்.. என் இளமையை களவாடுவதில் என்ன இன்பமோ வென்று..? .. சுயநல மனிதர்களின் கால்களில் சூடுபோட்டு.. .. மறையாத தழும்பாக்கி இது மறையும் வரை பொது நலத்துடன் வாழச் சொல்ல .. ஒவ்வொரு அரசியல்வாதியும் அருகில் அமரவைத்து ஏ தரித்திரமே .. நீ தரிக்கும் வெள்ளையாடையின் நோக்கமென்ன.. உற்றுநோக்கினால் உன்னில் ஏற்படும் தாக்கமென்ன.. சலவை தொழிலாலி தெரிகிறானா.. நீ சாக்கடைக்குள் புரண்டு சந்தனத்தை தெளித்து ஒளிந்து கொள்வது வெள்ளை வேட்டிக்குள்ளென.. ... குட்டி குட்டி.. உயிரிணங்கள்  அனைத்திடமும் வாழும் வரை அமைதியாக வாழ யாரிடம் வாழ்க்கைப்பாடம் கற்றதென.. .. எல்லா காதலருக்கும் பொதுவான கேள்வியாய்.. .. இருவர்காலம் முடியும் வரை நிரந்தர அன்பை தவணை முறையிலாவது தவறாமல் பரிமாறிக்கொள்ள உறுதிமொழி தரமுடியுமா என்று.. .. இந்த உலகம் உய்ய நோயற்ற வாழ்விற்கு மருந்தில்லா மாற்றம் யாரால் தரமுடியுமென .. தீராத வியாதிகளுக்கு தீர்க்கக...

சொல்லில் இன்பம்

 சொல்லில் இன்பம் கேட்கிறாய் .. என் மடிசாய்ந்து ஓர் நாள் என் தோள் சாய்ந்து  ஒருநாள்.. .. நான்கு விழிகள் கலக்க பலநாள்.. என் தலைதாழ ஒருநாள் .. நீ சொல்ல சொல்ல இன்பம் தான்டா.. நான் கேட்க..கேட்க உனக்கும் பேரின்பமடா.. .. எனை விலகிய பொழுதில் நடந்ததனைத்தும் ஒப்பித்து கேட்க வைக்கும் ஒப்பற்ற ஒளிவுமறைவில்லா நிறை காதல் உனதடா.. .. பணத்தில், பகட்டில் படுக்கையில்... பார்முழுதும் சுற்றுவதில்.. இன்னும் ஏதேதோவில் இன்பம் கூட்டக்கூடும் என்று சொல்பவர்கள் .. என் விழிக்குள் ஒளிந்து கொள்ளட்டும் .. உன் விழி நிறைக்கும்  நின் மொழி தரும் இன்பம் என் செல்லுக்குள் பூபூக்க .. இன்பம் யாதென உணரக்கூடும் .. ஒருவரில் ஒருவர் அன்போடு உறைதலே .. பேரின்ப வாழ்வின் பரிபாஷையென.. .. சொல்லில்லாமலே சொல்லும் நின்விழியும் நின் ஸ்பரிசம் சொல்லும் புதுமொழியும் .. ஆகச்சிறந்த காதலின் வெளிப்பாட்டாய் ஆட்கொள்ளுமடா.. இன்பா .. உன் இனியாள் கொடுத்து வளாய்..  உன்னில் சரம் புகுந்தவளாய் நீ என்னில் சரணடைந்தவனாய்!! ..

வாழ்த்துகள் பிரக்ஞானந்தா

 கூர்கொண்ட பார்வை .. குறிகொண்டு தாக்கும் .. இலக்கு இதுவென .. இலகுவாய் வெற்றிக்கனிகள் கைசேர்ந்தே .. புத்தியை தீட்டிய நீ.. தோல்வியிலும் புளங்காகிதம் கொள்வாய்.. .. மனம் தளராத தோல்வி வெற்றியெனவும் .. அடுத்த அபரீத வெற்றியின் படிகட்டெனவும் .. வாழ்த்துகள் உலகம் கொ ண்டாடும் இளவரசே!!