Posts

Showing posts from September, 2021

t#break

Image

t#break

Image

இமைகளை மூடவிடு

Image

T#break

Image

T#break

Image

குளிரே குளிராதே!

பிரபஞ்சத்தின் மீதான காதல் எனது .. உன்மீதான மோகம் கொஞ்சம் அதில் உண்டெனும் கர்வத்தில் வரமறுக்கிறாயா? .. மறக்கிறாயா என்று கேட்கும் அப்பாவி நானில்லை! .. முப்பொழுதும் உன்மீதான எதிர்பார்ப்பில்லை எப்பொழுதேனும் உன்மீதான தேடலிலும் நீ தொலைவதே சாஸ்வதமாய்! .. ஒருபொழுதும் நீ நீயாகவும் வருவதில்லை நீயும் உனக்கான வருகைக்கு உத்தரவுக்கு காத்திருப்பதாய் சொல்லும் பொய்களில் என்மெய் வலிகள் தீருவதில்லை! .. நீ எப்பொழுதும் ஏமாற்றுகிறாய்! நான் எப்பொழுதும் போல் ஏமாறுகிறேன்... .. ஒன்றை புரிந்து கொல்! எதிர்பார்ப்பின் பின்வரும் ஏமாற்றத்தின் கணம் ஏற்பதற்கில்லை .. ஏறெடுத்துப்பாராமல் போகும் நின்குணம் பிடிக்கவில்லை இக்கணம் நீ நீயாக இல்லாது போனால் சொல்லாது மாற்றிக் கொள் உன்பெயரை! .. இனி குளிரே குளிராதே .. வெளிரிப் போய் வெட்கம் கெட்ட வெட்கை என்று மாற்றிக்கொள்! .. நான் தகிப்பை சகித்துக் கொள்கிறேன் மெல்ல பழகியே! .. #தலைப்பு குளிரே குளிராதே

அற்புதா V பிரியசகி

Image
நீ ஆம் மென்று சொல்லும் வார்த்தையை இல்லையென்று வெறுமைகூட்டும் அத்தனையிலும் இட்டு நிரப்புகிறேன் .. வேறென்ன சொல்ல எனக்கான வலிதாங்கி நீயடா அற்புதா

கனவில் ஆடாதே கண்ணாமூச்சி

கண்டும் காணாமல் கடக்கிறேன் .. விழியில் விழுங்கி இதழின் மௌனத்தில் செரிக்கிறேன் .. நிழலாய் நீ வந்தாலும் நிஜமாய் ஒதுங்கிப் போகிறேன் .. இதயத்தின் நான்கு அறைகளை அவசியமின்றியே தாழிட்டு அனுமதி மறுக்கிறேன் .. இன்னும் என்ன செய்ய .. உன்னிடமிருந்து விலகி நிற்க! .. இருந்தும் இரக்கமின்றி இரக்காமலே இரவை கொள்ளை கொள்கிறாய் .. அடேய்! தூக்கம் என்பது உனை தூக்கி கொண்டாடும் விழாவா என்ன? .. உன்னை மறுக்கிறேனடா புரிந்துகொள் .. இனி கனவில் ஆடாதே கண்ணாமூச்சி .. என் இமைகள் தன்கடன் முடிக்கவிடுடா!