கனவில் ஆடாதே கண்ணாமூச்சி
கண்டும் காணாமல் கடக்கிறேன்
..
விழியில் விழுங்கி
இதழின் மௌனத்தில் செரிக்கிறேன்
..
நிழலாய் நீ வந்தாலும்
நிஜமாய் ஒதுங்கிப் போகிறேன்
..
இதயத்தின் நான்கு அறைகளை
அவசியமின்றியே தாழிட்டு
அனுமதி மறுக்கிறேன்
..
இன்னும் என்ன செய்ய
..
உன்னிடமிருந்து விலகி நிற்க!
..
இருந்தும் இரக்கமின்றி
இரக்காமலே இரவை கொள்ளை
கொள்கிறாய்
..
அடேய்!
தூக்கம் என்பது உனை தூக்கி கொண்டாடும் விழாவா என்ன?
..
உன்னை மறுக்கிறேனடா
புரிந்துகொள்
..
இனி கனவில் ஆடாதே
கண்ணாமூச்சி
..
என் இமைகள் தன்கடன் முடிக்கவிடுடா!
Comments
Post a Comment