குளிரே குளிராதே!
பிரபஞ்சத்தின் மீதான காதல் எனது
..
உன்மீதான மோகம் கொஞ்சம் அதில் உண்டெனும்
கர்வத்தில் வரமறுக்கிறாயா?
..
மறக்கிறாயா என்று கேட்கும்
அப்பாவி நானில்லை!
..
முப்பொழுதும் உன்மீதான எதிர்பார்ப்பில்லை
எப்பொழுதேனும்
உன்மீதான தேடலிலும்
நீ தொலைவதே சாஸ்வதமாய்!
..
ஒருபொழுதும்
நீ நீயாகவும் வருவதில்லை
நீயும் உனக்கான வருகைக்கு
உத்தரவுக்கு காத்திருப்பதாய்
சொல்லும் பொய்களில்
என்மெய் வலிகள் தீருவதில்லை!
..
நீ
எப்பொழுதும் ஏமாற்றுகிறாய்!
நான் எப்பொழுதும் போல் ஏமாறுகிறேன்...
..
ஒன்றை புரிந்து கொல்!
எதிர்பார்ப்பின் பின்வரும் ஏமாற்றத்தின் கணம் ஏற்பதற்கில்லை
..
ஏறெடுத்துப்பாராமல் போகும் நின்குணம் பிடிக்கவில்லை
இக்கணம் நீ நீயாக இல்லாது போனால்
சொல்லாது மாற்றிக் கொள்
உன்பெயரை!
..
இனி குளிரே குளிராதே
..
வெளிரிப் போய் வெட்கம் கெட்ட
வெட்கை என்று மாற்றிக்கொள்!
..
நான் தகிப்பை சகித்துக் கொள்கிறேன்
மெல்ல பழகியே!
..
#தலைப்பு
குளிரே குளிராதே
Comments
Post a Comment