நினைப்பதெல்லாம் நடந்திட ஆசை தான்

 இந்த இருளை பிடித்து

நிறுத்தி வைத்து

ஒருநாளேனும் கேள்வி

கேட்க ஆசை..

இரவில் மட்டும் சிலபல

உயிர்களை உணர்வுகளை

ஊசலாடச் செய்வதேனோ

என்றே..

..

அந்த

கடிகார முள்ளோடும்

கதைத்திட ஆசைதான்..

காலத்தோடு பேரம் பேசி

நிற்காமல்.. என் இளமையை

களவாடுவதில் என்ன

இன்பமோ வென்று..?

..

சுயநல மனிதர்களின் கால்களில்

சூடுபோட்டு..

..

மறையாத தழும்பாக்கி

இது மறையும் வரை

பொது நலத்துடன் வாழச் சொல்ல

..

ஒவ்வொரு அரசியல்வாதியும்

அருகில் அமரவைத்து

ஏ தரித்திரமே

..

நீ தரிக்கும் வெள்ளையாடையின்

நோக்கமென்ன..

உற்றுநோக்கினால்

உன்னில் ஏற்படும் தாக்கமென்ன..

சலவை தொழிலாலி தெரிகிறானா..

நீ சாக்கடைக்குள் புரண்டு

சந்தனத்தை தெளித்து

ஒளிந்து கொள்வது

வெள்ளை வேட்டிக்குள்ளென..

...

குட்டி குட்டி.. உயிரிணங்கள் 

அனைத்திடமும் வாழும்

வரை அமைதியாக வாழ

யாரிடம் வாழ்க்கைப்பாடம்

கற்றதென..

..

எல்லா காதலருக்கும் பொதுவான

கேள்வியாய்..

..

இருவர்காலம் முடியும் வரை

நிரந்தர அன்பை

தவணை முறையிலாவது

தவறாமல் பரிமாறிக்கொள்ள

உறுதிமொழி தரமுடியுமா

என்று..

..

இந்த உலகம் உய்ய

நோயற்ற வாழ்விற்கு மருந்தில்லா

மாற்றம் யாரால் தரமுடியுமென

..

தீராத வியாதிகளுக்கு தீர்க்கக்கூடிய

மருந்துகள் ஏன் கண்டு தரவில்லை

..

காசு பார்க்கவா..

இதை இன்னும் கூட கோபத்துடன்

சாடுகிறேன்..

..

இருக்கும் சொர்க்க பூமியை

நகரம் என்ற பெயரில்

நகரமுடியா நெருக்கடியுடன்

நரகமாக்கி..

..

செவ்வாய்கும் நிலவுக்கும்

குடிபுக வேவு பார்ப்பதேன்

..

விழுந்து விழுந்து படித்து

உடல் அலுக்காத வேலைதேட

ஒவ்வாத உணவுபழக்கமா

என்று கேட்கத்தான் ஆசையாய்

..

படித்த படிப்புக்கு உள்நாட்டில்

மாடு கூட வாய்ப்பில்லாமல்

தூங்கி தூங்கி

தூர்ந்துப் போன வாலிபர்களின்

எதிர்காலத்திற்கு

என்ன திட்டம் டிஜிடல்

இந்தியா வைத்துள்ளதென..

..

சரி சரி கேள்விகளை விட்டு

பதிலாகிறேன் உனக்கு 

வாடா..

முத்தத்தை கொடுத்து

மொத்தத்தை களவாட

துடிக்கும் விழிகளுக்கு

தானாய் விழுந்து விருந்தாகிறேன்

..

நாளை நம்ம பொழைப்பு

நாறிடும்ல..

..

வா..  நமக்காய் மட்டும்

வேலை பார்ப்போம்

..

ஆ.. சுடுகிறது கால்கள்

..

சூடிட்டதோ கடவுள்

சுயநலம் தொட்டவுடன்

Comments